சீயோனே நீ கெம்பீரி

 

 

சீயோனே நீ கெம்பீரி

இஸ்ரவேலே நீ ஆர்ப்பரி

எருசலேமே நீ களிகூரு

திருச்சபையே நீ மகிழ்ந்திடு    - 2

 

உன் தேவன் உன் நடுவில்

உன் ராஜா உன் நடுவில்  -  2

உன் பேரில் களிகூர்ந்து

தம் அன்பினிமித்தம் அமர்ந்திருப்பார்- 2

 

ஆக்கினையெல்லாம் அகன்றதே

எதிர்த்த சத்துரு விலகிற்றே

இனி நீ தீங்கை காண்பதில்லையே

என்றவர் உள்ளார் உன்னோடு      - உன் தேவன்

 

நிந்தைகள் எல்லாம் அகன்றதே

சஞ்சலம்; எல்லாம் ஓய்ந்ததே

இனி உன் கைகள் தளர்வதில்லையே

என்றவரை நீ ஸ்தோத்தரி             - உன் தேவன்

 

சிறுமை வெட்கம் நீங்கிற்றே

சிறையிருப்பெல்லாம் மாறிற்றே

இனி நான் என்றும் கீர்த்தியுடனே

உயர்ந்திருப்பேனே புகழ்ச்சியாய் - உன் தேவன்